பெங்களூரு அணியின் தொடக்க வீரரான பில் சால்ட்டை சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ஆட்டமிழக்க செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. Dhoni’s lightning-fast stumping create buzz
ஐபிஎல் தொடரில் 8வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே சேப்பாக்கத்தில் இன்று (மார்ச் 28) இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.
முதல் ஓவரை வீசிய கலீல் அகமது 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் வழங்கினார். அஸ்வின் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு சிக்சர் 2 பவுண்டரி விரட்டிய சால்ட் மேலும் 16 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து சால்ட் அதிரடியாக பேட்டை சுழற்றிய நிலையில், 5வது ஓவரை வீசிய நூர் அகமதுவின் பந்தை கணிக்க தவறிய சால்ட்டை தனது அதிவேக ஸ்டம்பிங் திறமையால் அவுட் செய்தார் தோனி.
தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் (27) அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு கோலியுடன் கேப்டன் படிதாரும் இணைந்து அதிரடி காட்டினர். இதனால் ஜெட் வேகத்தில் உயர்ந்த பெங்களூரு அணியின் ஸ்கோர் 11 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
தொடர்ந்து அதிரடி காட்டி வந்த கோலியின் கேட்ச் வாய்ப்புகளை ஹூடா மற்றும் திரிபாதி தவறவிட்ட நிலையில், மூன்றாவது முறையாக கோலியின் கேட்ச்சை மிஸ் செய்யாமல் பிடித்து அவுட் செய்தார் ரச்சின்.
இதனையடுத்து 13 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது பெங்களூரு அணி.