தோனி தனது மகன் யுவராஜ்சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், அடிக்கடி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பது உண்டு. அந்த வகையில், மீண்டும் தோனி மீது யோக்ராஜ் பாய்ந்துள்ளார்.
தோனி தொடர்பாக, ஸீ ஸ்விட்ச் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
அதில்அவர், தோனி எனது மகனுக்கு செய்த தவறான செயல்களுக்காக ஒரு போதும் அவரை, நான் மன்னிக்க மாட்டேன். என் மகனுக்கு எதிராக நடந்தவர்களை மன்னிக்கும் பக்குவம் எனக்கு இல்லை.
கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதற்கு தோனி செய்த பாவங்களே காரணம். இன்னும் 5 – 6 வருடங்கள் விளையாடியிருக்க வேண்டிய எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி ஒழித்து விட்டார்.
சேவாக், கம்பீர் போன்றவர்கள் கூட மற்றொரு யுவராஜ் சிங் பிறக்க முடியாது என்று கூறியிருந்தனர். புற்றுநோயில் இருந்து மீண்டு நாட்டுக்காக விளையாடி உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று கூறினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு யுவராஜ்சிங்கிற்கு அணியில் இடம் கிடைக்காமல் போனபோது, ”தோனி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார் என்றும் தோனி ராவணன் போன்றவர் என்றும் யோக்ராஜ் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“வலியை பேசும் வாழை” : சான் பிரான்சிஸ்கோவில் படம் பார்த்த ஸ்டாலின்