தோனியின் ஆசை நிறைவேறியது: சி.எஸ்.கே-வின் ‘பிளேயிங் 11’ என்ன?

Published On:

| By Selvam

dhoni dream fulfilled csk playing 11

டிசம்பர் 19 அன்று நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில், 10 அணிகள் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தது. dhoni dream fulfilled csk playing 11

அந்த போட்டியில், 2 ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல்முறையாக ரூ.20 கோடியை கடந்து சாதனை படைத்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸை ஐதராபாத் அணி ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் கைப்பற்றியது.

ADVERTISEMENT

அந்த வரிசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஏலம் ஒரு மிகச்சிறப்பான ஏலமாகவே அமைந்துள்ளது. முதலில் ராச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்கு பெற்ற சென்னை அணி, சென்னை அணியின் செல்ல பிள்ளை லார்ட் ஷரதுல் தாகூரை ரூ.4 கோடி கொடுத்து மீண்டும் அணிக்குள் அழைத்துக்கொண்டது.

ADVERTISEMENT

அதை தொடர்ந்து, கடும் போட்டிக்கு மற்றொரு நியூசிலாந்து ஆல்-ரவுண்டரான டெரில் மிட்சலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் பெற்றது.

இவர்களை தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தால் ‘வலது கை சுரேஷ் ரெய்னா’ என அழைக்கப்பட்ட சமீர் ரிஸ்வி என்ற 20 வயது இளம் வீரரை ரூ.8.40 கோடிக்கு கைப்பற்றியது.

ADVERTISEMENT

இவர்கள் மட்டுமின்றி, இடது கை வேகப்பந்துவீச்சாளரான முஸ்டஃபிசூர் ரஹ்மான் (ரூ.2 கோடி) மற்றும் விக்கெட் கீப்பராக அவினாஷ் ராவ் ஆரவல்லி (ரூ.20 லட்சம்) ஆகியோர் என மொத்தம் 6 தரமான வீரர்களை சென்னை அணி கைப்பற்றியுள்ளது.

இந்த ஏலம் குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “தலைவர் என்ன வேணும்னு கேட்டாரோ, அந்த பிளேயர்ஸ் எல்லாம் கெடச்சிருக்காங்க. இது மிகப்பெரிய லக்-னு தான் சொல்லணும். நான் எப்போவும் சொல்றது ஒண்ணுதான், ‘தலைவன் இருக்கிறான்’. அவன் என்ன பண்ணுவான்-னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இப்போ அவருக்கு பிடிச்ச பிளேயர்ஸும் இருக்காங்க. இந்த வருசமும் நமக்கு சாதகமான முடிவு தான் வரும்னு நம்புறேன்”, என தெரிவித்துள்ளார்.

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘பிளேயிங் 11’ எப்படி இருக்கும்?

சென்னை அணியின் ஆஸ்தான துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாத் மற்றும் டெவன் கான்வே ஆகியோரே, இந்த ஆண்டும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து, மொயீன் அலி மற்றும் சிவம் துபே ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, அம்பதி ராயுடு ஒய்வு பெற்றுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்ப நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டெரில் மிட்சலை சென்னை அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து, அந்த அழிக்க முடியாத 2 பெயர்கள் தோனி மற்றும் ஜடேஜா.

பந்துவீச்சில், சென்னை அணியின் இளம் புயல்கள் தீபக் சஹர் மற்றும் ஷரதுல் தாகூர் மீண்டும் இணைந்து இந்த ஆண்டு தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் ஒரு அன்-கேப்டு வீரர் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், ‘வலது கை சுரேஷ் ரெய்னா’ என அழைக்கப்படும் சமீர் ரிஸ்விக்கு அந்த இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜடேஜா, மொயீன் அலி, டெரில் மிட்சல், சமீர் ரிஸ்வி என தோனி வசம் நிறைய சுழற்பந்து வாய்ப்புகள் உள்ளதாலும், டெவன் கான்வே, மொயீன் அலி, டெரில் மிட்சல் என 4ல் 3 வெளிநாட்டு வீரர்களின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கடந்த சீசனில் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட மதீசா பத்திரனா அணியின் 11வது வீரராக இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மைதானங்களை கருத்தில் கொண்டு, டெரில் மிட்சலுக்கு பதில் மிட்சல் சான்டனர் அல்லது மஹீஸ் தீக்சனா அணியில் சேர்க்கப்பட்டால் ஆச்சரியம் இல்லை.

கடந்த சீசனில் அம்பதி ராயுடு இம்பேக்ட் பிளேயராக செயல்பட்ட நிலையில், இந்த சீசனில் அந்த இடத்தில் அஜின்கியா ரஹானே வர வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11:

டெவன் கான்வே
ருதுராஜ் கெய்க்வாத்
மொயீன் அலி
டெரில் மிட்சல்
சிவம் துபே
சமீர் ரிஸ்வி
ரவீந்திர ஜடேஜா
எம்.எஸ்.தோனி (C) (WK)
ஷரதுல் தாகூர்
தீபக் சஹர்
மதீசா பத்திரனா

இம்பேக்ட் பிளேயர்: அஜின்கியா ரஹானே

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான லாரன்ஸ், சூரி படங்கள்!

வணிக சிலிண்டர் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

dhoni dream fulfilled csk playing 11

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share