தருமபுரம் ஆதீனம் வழக்கு: அதிமுக நிர்வாகி தலைமறைவு!

Published On:

| By Selvam

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி, மிரட்டல் விடுத்த வழக்கில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட  வழக்கறிஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமறைவாகியுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி, மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஆடுதுறை வினோத், திருவெண்காடு விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள 5 பேரையும் பிடிக்க திருச்சி ஐஜி கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தலைமறைவானவர்களின் செல்போன் நெட்வொர்க் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஜெயச்சந்திரன் புதுச்சேரியில் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஜெயச்சந்திரனை கைது செய்ய தனிப்படை போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் வேல்முருகன் வைத்த இரண்டு டிமாண்ட்!

ஜோஷ்வா இமை போல் காக்க – விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share