தர்மதுரை – 2: விஜய் சேதுபதி ரோலில் யார்?

Published On:

| By Balaji

2016ம் ஆண்டில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தர்மதுரை. அப்போது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்த விஜய் சேதுபதி தன் குருநாதர் சீனுராமசாமிக்காக படத்தை முடித்துக் கொடுத்தார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக ஆர்.கே.சுரேஷ் தரப்பில் செய்திகள் வெளியானது. படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகன் விஜய்சேதுபதி இருவரிடமும் கலந்து பேசி முடிவு செய்யாமல் அறிவிக்கப்பட்ட தகவல் என கூறப்பட்டது.

ADVERTISEMENT

அதே நேரம் தர்மதுரை – 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்று அவரது தரப்பில் இருந்து மறைமுகமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் சீனு ராமசாமி அந்த படத்தை தான் இயக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது தர்மதுரை-2 படத்தை தயாரித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், விஜய்சேதுபதி, சீனுராமசாமி ஆகிய இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் தர்மதுரை-2 படத்தில் அவர்கள் இடம்பெறவில்லை. அதனால் அப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த ரோலில் நான் நடிக்க, வேறொரு இயக்குனர் இயக்குகிறார் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share