7 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் தனுஷ் – அனிருத்

Published On:

| By Minnambalam

நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை புதிதாக முயற்சி செய்து தமிழ் சினிமாவை வேற லெவலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது நடிப்பில் தி கிரே மேன் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது.

இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன், வெற்றிமாறனுடன் ஒரு படம், , ஆயிரத்தில் ஒருவன் 2, சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், வாத்தி,கேப்டன் மில்லர் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

ADVERTISEMENT

இந்நிலையில் , நடிகர் தனுஷ் தற்போது ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் – இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

ADVERTISEMENT

திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ட்ரைலர் நாளை ( ஆகஸ்ட் 7 ) ல் வெளியாகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

டெல்லி புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், என்ன காரணம்?

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share