தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரின் 5௦-வது படத்துக்கு ‘ராயன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் அவருடன் இணைந்து நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று (பிப்ரவரி 19) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் கதை அஜித்திற்காக, செல்வராகவன் எழுதியது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக ‘காசிமேடு’ என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டதாகவும் இதில் அஜித், தனுஷ், பரத் மூவரும் அண்ணன்-தம்பிகளாக நடிக்கவிருந்ததாகவும் கூறப்படுகிறது. சில காரணங்களினால் அஜித் இதில் நடிக்க முடியாமல் போக தனுஷ் தற்போது சந்தீப் கிஷன், காளிதாஸ் இருவரையும் தம்பிகளாக மாற்றி படத்தை முடித்திருக்கிறார்.
பாஸ்ட்புட் கடை நடத்தி வரும் சகோதரர்கள் கேங்ஸ்டர்களாக எப்படி மாறினார்கள்? என்பது தான்’ராயன்’ படத்தின் கதை என கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியை அடிப்படையாகக் கொண்டு படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெருக்கடி நிலையில் தமிழ்நாட்டின் கடன்! பட்ஜெட்டில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
‘சட்டப்படி நடவடிக்கை’ திருப்பியடித்த திரிஷா… மன்னிப்பு கேட்ட அதிமுக நிர்வாகி!