ADVERTISEMENT

தத்துவத்தில் இறங்கிய தனுஷ் சகோதரர்!

Published On:

| By Prakash

வாழ்வில் துணை குறித்து இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டிருக்கும் பதிவு, வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர், நடிகர் தனுஷின் சகோதரர் ஆவார். தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

ADVERTISEMENT

சமீபத்தில் நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தவிர, செல்வராகவனும் படங்களில் நடித்து வருகிறார். தற்போதுகூட, இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தன்னுடைய ட்விட்டர் தளத்தில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டிக் கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த செப்டம்பர் மாதம் இயக்குநர் செல்வராகவன் வீட்டுக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

ADVERTISEMENT

திருவையாறில் புறவழிச்சாலை தேவையில்லை: சீமான்

தமிழகத்தில் மாற்றம் நிகழும்: ஜெ.பி.நட்டா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share