கேப்டன் மில்லர்: உதயநிதிக்கு தனுஷ் நன்றி!

Published On:

| By Monisha

Dhanush thanked Udayanidhi for his greetings

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், அருண்விஜய் நடிப்பில் மிஷன் சேப்டர் -1 ஆகிய மூன்று படங்கள் முன்னதாகவே ஜனவரி 12 அன்று வெளியானது.

கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1 ஆகிய இரண்டு படங்களையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கேப்டன் மில்லர், அயலான் இரண்டு படங்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓப்பனிங் இருந்தது.

ADVERTISEMENT

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ தர சான்றிதழ் வழங்கியுள்ளது.

முதல் நாள் முழுமையான வசூல் தகவல்கள் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கு திரையரங்கு வசூல் திருப்திகரமாக உள்ளதால், விமர்சகர்கள், பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருவதை முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கதாநாயகன் தனுஷை நேரில் சந்தித்து ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படக்குழுவை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் அந்த பதிவில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும், நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்’ என்று பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் தனுஷ் குறிப்பிட்டிருப்பதாவது, ”உங்களுக்கு பிடித்த கலை படைப்பை பாராட்ட நீங்கள் ஒருபோதும் தவறியது இல்லை. ‘கர்ணன்’ பட வெளியீட்டின் போதும் நீங்கள் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

இந்த பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை – அயோத்தி விமான சேவை எப்போது?

உக்ரைன் மீது மீண்டும் உக்கிரம் காட்டும் ரஷ்யா!

Photo of author
Monisha
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share