தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்திற்கு சிக்கல்! ரூ. 84 கோடி கேட்டு ஈரோஸ் நிறுவனம் அதிரடி வழக்கு!

Published On:

| By Santhosh Raj Saravanan

dhanush tere ishq mein movie legal trouble eros international lawsuit

கோலிவுட் டூ பாலிவுட் வரை பிஸியாக இருக்கும் தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ (Tere Ishk Mein) திரைப்படம் தற்போது ஒரு மாபெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. இயக்குனர் ஆனந்த் எல். ராய் மீது ஈரோஸ் இன்டர்நேஷனல் (Eros International) நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் ரூ. 84 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த திடீர் மோதல்? (The Raanjhanaa Connection): கடந்த 2013-ல் தனுஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ராஞ்சனா’ (Raanjhanaa) படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஈரோஸ். தற்போது அதே கூட்டணியில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தை ‘ராஞ்சனா’வின் ஆன்மீகத் தொடர்ச்சி (Spiritual Sequel) என விளம்பரப்படுத்தியதே இந்தப் பிரச்சனைக்குக் காரணம். “எங்களிடம் அனுமதி பெறாமல் ‘ராஞ்சனா’ பிராண்டைப் பயன்படுத்தியது தவறு” என ஈரோஸ் கொந்தளித்துள்ளது.

ADVERTISEMENT

வழக்கில் சொல்லப்பட்டுள்ள ‘ஷாக்’ தகவல்கள்:

  • From the World of Raanjhanaa: படத்தின் டீசரில் இந்த வாசகத்தைப் பயன்படுத்தியது மற்றும் #WorldOfRaanjhanaa என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தியது சட்டவிரோதம் என ஈரோஸ் கூறுகிறது.
  • அதே கேரக்டர்கள்? ‘ராஞ்சனா’வில் முராரி கேரக்டரில் நடித்த முகமது ஜீஷன் அய்யூப், இந்தப் படத்திலும் அதே போன்ற கேரக்டரில் நடித்திருப்பது காப்புரிமை மீறல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • ஷங்கர் Vs குந்தன் ஷங்கர்: தனுஷின் கேரக்டர் பெயரான ‘ஷங்கர்’ என்பதும், அவரது எமோஷனல் பயணமும் ‘ராஞ்சனா’வின் குந்தன் ஷங்கரை அப்படியே பிரதிபலிப்பதாக ஈரோஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! ஒரு பக்கம் கோர்ட் கேஸ் எனப் பரபரப்பு நிலவினாலும், தனுஷ் – கீர்த்தி சனோன் (Kriti Sanon) நடித்துள்ள இந்தப் படம் வரும் ஜனவரி 23, 2026 (வெள்ளிக்கிழமை) முதல் Netflix ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் இந்த வார இறுதியில் நெட்பிளிக்ஸில் தனுஷின் மிரட்டலான நடிப்பைக் காணலாம்!

ADVERTISEMENT

இந்த 84 கோடி ரூபாய் பஞ்சாயத்து எங்கே போய் முடியும்? ஆனந்த் எல். ராய் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share