தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இவருடன் கிருத்தி சனோன் நடித்திருந்தார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி வெளியானது.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.152 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான கலர் யெல்லோ மூவிஸ் அறிவித்துள்ளது.

இப்படம் உலக அளவில் முதல் வாரத்தில் ரூ. 118.76 கோடி வசூலித்ததாகவும், 10 நாட்களில் உலகளவில் ரூ.130 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
இந்தசூழலில் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் இன்று (டிசம்பர் 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷின் இந்தி படங்கள்
தனுஷின் இந்திப் பயணம் 2013-ல் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான ‘ராஞ்சனா’ திரைப்படம் மூலம் தொடங்கியது. இப்படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இதையடுத்து, 2015-ல் அமிதாப் பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ திரைப்படம் வெளியானது.
2021-ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சாரா அலி கான், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘அட்ரங்கி ரே’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. நான்காவது படமாக தேரே இஷ்க் மெய்ன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
