தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகிறது.
இந்த வருடம் தனுஷ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ராயன். ஜூலை 26-ஆம் தேதி வெளியான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலெட்சுமி சரத்குமார் என ஒரு ரசிகர் பட்டாளமே நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் படமாக வெளியான ராயன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 150 கோடிக்கு மேல் ராயன் குவித்தது.
இந்தநிலையில், ராயன் திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”வயநாடு இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை” : தேர்தல் ஆணையர் விளக்கம்!
மெட்ரோவுக்கு பூஜ்ஜியம்…. ரயில்வேக்கு ஆயிரம்… மத்திய அரசை சாடிய டி.ஆர்.பாலு