ஹாலிவுட்டில் ‘ராயன்’ சாதனை… தனுஷுக்கு கிடைத்த வேற லெவல் அங்கீகாரம்!

Published On:

| By Selvam

ஹாலிவுட்டில் இயங்கி வரும் பாரம்பர்யம் மிக்க “அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில்” ராயன் படத்தின் திரைக்கதை பட்டியலிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கிய படம் ராயன் . தனது திரையுலக பயணத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 50-வது திரைப்படமான ‘ராயன்’ ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ADVERTISEMENT

இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ராயன் படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் இடம்பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று ராயன் படத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ராயன் படத்தின் திரைக்கதை, அப்படத்தில் இடம்பெற்ற அதீதமான வன்முறை காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருந்த போதிலும் படம் வெளியான மூன்று நட்களில் உலகம் முழுவதும் சுமார் 75 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்தது ராயன்.

100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்ததா, அதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்குமா என சினிமா ஆர்வலர்களும், தனுஷ் ரசிகர்களும் எதிர்பார்த்து வந்த நிலையில் ஹாலிவுட்டில் இயங்கி வரும் பாரம்பர்யம் மிக்க “அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில்” ராயன் படத்தின் திரைக்கதை பட்டியலிடப்பட்டுள்ள தகவலை சன்பிக்சர்ஸ் அறிவித்து தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்பு தமிழில் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங்  திரைக்கதை இதே போன்று தேர்வாகியதும் குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கரைபுரண்டு ஓடும் காவிரி… களைகட்டும் ஆடிப்பெருக்கு!

பிடிவாதத்தின் எல்லைகளை உடைத்துவிடுங்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share