தனுஷுடன் நடித்த நடிகைகளும் நயன்தாராவிற்கு ஆதரவு!

Published On:

| By Minnambalam Login1

dhanush likes nayanthara post

‘நயன்தாரா – பியாண்ட் தெ ஃபேரிடேல்’ என்ற ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பு தளத்தில் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின் முடிவில் “எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் “Spread Love” என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். Om Namah Shivaya” என்று தனுஷுக்கு அறிவுரை கூறியிருந்தார் நயன்தாரா.

ADVERTISEMENT

இந்தநிலையில் நயன்தாராவிற்கு ஆதரவளிக்கும் விதமாக நடிகைகள்  ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கவுரி கிஷன், காயத்ரி ஷங்கர், நமீதா, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி உள்ளிட்டவர்கள் அவரது பதிவை லைக் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இவர்களில் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், நஸ்ரியா, பார்வதி உள்ளிட்டோர் தனுஷுடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தனுஷ் – நயன்தாரா மோதல் : நானும் ரவுடிதான் படம்தான் காரணமா?

நயன்தாரா Vs தனுஷ்… நடந்தது என்ன?

“அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல” – ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share