தனுஷ், நாகர்ஜூனா நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது. dhanush Kubera crossed 100 crore in four days!
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 20ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குபேரா”. முதல்நாள் முதலே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தனுஷ் நடிப்பை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில், குபேரா படத்தின் வசூல் குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்ததுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ரூ. 100 கோடி படத்தை தனுஷ் கொடுத்து வருகிறார். திருச்சிற்றம்பலம் (2022), வாத்தி (2023), ராயன் (2024) படத்தைத் தொடர்ந்து இந்தாண்டு நான்காவது படமாக குபேராவும் (2025) அந்த வரிசையில் இணைந்துள்ளது.
