மீண்டும் இயக்குநராக களமிறங்கும் தனுஷ்… அப்டேட் வெளியானது!

Published On:

| By christopher

Dhanush is back as a director

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை கொண்டவர் நடிகர் தனுஷ். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் பா. பாண்டி.

இந்த படத்திற்கு பின் தற்போது நடிகர் தனுஷ் தனது D 50 படத்தை இயக்கி நடித்துள்ளார். தனுஷின் 50 வது படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

D 50 படத்திற்கு பின் தனுஷ் மூன்றாவதாக ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். DD3 (Dhanush Directorial 3) படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

தனுஷின் DD3 படத்தில் அவரது நெருங்கிய உறவினரின் மகன் வருண் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் DD3 படத்தின் அதிகாரப்பூர்வமான அப்டேட் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் DD3 என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

5 நாட்களுக்கு பிறகு… திருச்செந்தூர் – தூத்துக்குடி பேருந்து சேவை தொடங்கியது!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்… ரசிகர்கள் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share