நடிகர் தனுஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ’தி எக்ஸ்ட்ராடனரி ஜர்னி ஆஃப் தி பகிர்’, ’தி கிரே மேன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படம் இன்று (ஜனவரி 12) வெளியாகி உள்ளது. Dhanush is acting again in Hollywood
சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படத்தின் புரோமோஷனுக்காக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தொடர்ந்து பல பேட்டிகள் அளித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரனுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கும் நடிகை பிரியங்கா மோகனும் சில பேட்டிகளில் கலந்து கொண்டார்.
அப்படி இவர்கள் இருவரும் கலந்து கொண்ட ஒரு பேட்டியில், இங்கிலீஷில் எந்த ஹாலிவுட் நடிகரை வைத்து கேப்டன் மில்லர் படத்தை நீங்கள் இயக்க விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர், இயக்குனர் அருண் மாதேஸ்வரனிடம் கேட்ட கேள்விக்கு,
தனுஷ் அவர்களே ஹாலிவுட் நடிகர் தான் அவரை வைத்தே படம் இயக்குவேன் என்று பதில் அளித்தார். மேலும் தனுஷ் மீண்டும் ஒரு புதிய ஹாலிவுட் படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும் கூறினார்.
தற்போது தனுஷின் அடுத்த ஹாலிவுட் படம் குறித்து அருண் மாதேஸ்வரன் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ரைஸ் ஆப் மில்லர் என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருக்கிறார்.
தற்போது வெளியாகும் கேப்டன் மில்லர் படம் இந்தக் கதையின் இரண்டாவது பாகம் என்றும், இந்தப் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தால் கேப்டன் மில்லர் படத்தின் Prequel மற்றும் Sequel வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூர்யாவின் ’புறநானூறு’ படத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர்
திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
மகர விளக்கு: பக்தர்களுக்கு தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை: விற்பனைக்குக் குவியும் மஞ்சள் – கரும்பு கட்டுகள்!