ஜெ படத்தின் தலைப்பை வைக்கும் தனுஷ்

Published On:

| By Balaji

ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப்பச்சன், அக்க்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். தனுஷ் நடிப்பில் மூன்றாவது இந்திப்படம் தயாராகியிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார்.

அட்ராங்கி ரே என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாரா அலிகான் மற்றும் நடிகர் அக்க்ஷய் குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘அட்ரங்கி ரே’ படத்தின் கதையை ஹிமான்ஷு சர்மா எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

படத்தின் வேலைகள் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்படத்தைத் மொழி மாற்றம் செய்து தமிழிலும் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழில் இந்தப் படத்துக்கு `கலாட்டா கல்யாணம்` என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.1968 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் ஜெயலலிதா உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் கலாட்டா கல்யாணம்.

ADVERTISEMENT

தனுஷ் நடித்திருக்கும் இந்திப்படத்தின் கதைக்குப் பொருத்தமாக இந்தப் பெயர் இருந்ததால் அப்பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள். தனுஷ் நேரடியாக நடித்த தமிழ்ப்படம் மாறன். ஓடிடி வெளியீட்டுக்குப் போய்விட்டதால் அதை ஈடுகட்டும் விதமாக இந்திப்படத்தைத் தமிழாக்கி தமிழ்நாட்டில் வெளியிடுகின்றனராம்.

**-இராமானுஜம்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share