அப்போ இளையராஜா… இப்போ அப்துல்கலாம்… ஆதிபுருஷ் இயக்குநர் கையில் தனுஷ்

Published On:

| By christopher

dhanush going to act in abdul kalam biopic

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. dhanush going to act in abdul kalam biopic

தமிழ் சினிமாவில் பன்முக திறன் கொண்ட படுபிஸியான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ்.

ADVERTISEMENT

இட்லி கடை படத்தை இயக்கி நடித்து இருக்கும் அவர், குபேரா படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் Tere Ishk Mein என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடிப்பதாக முன்பே அறிவிப்பு வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது விஞ்ஞானி மற்றும் முன்னாள் ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்திற்கு ’கலாம் – தி மிஸிள் மேன் ஆஃப் இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிரபாஸின் ஆதிபுருஷ் பட புகழ் இயக்குனர் ஓம் ராவத் தான் பயோபிக் படத்தை இயக்க உள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் தி டெல்லி ஃபைல்ஸ் என சர்ச்சைக்குரிய படங்களை தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share