இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று (ஜூன் 20) வெளியான திரைப்படம் குபேரா. இப்படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, ஜிம் சார்ப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். dhanush fans angry on nagarjuna speech at kuberaa
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எனினும் தனுஷ் மற்றும் நாகர்ஜுனாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 21) ஹைதராபாத்தில் நடந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நாகர்ஜுனா, முதலில் படத்தின் வெற்றி குறித்து பேசினார்.
அவர், ”குபேராவில் நடித்ததன் மூலம் எனக்கு கிடைத்து வரும் அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தீபக் எனது மிகவும் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று. ரசிகர்களின் அன்பு, விமர்சனங்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வரவேற்பைப் பார்க்கும்போது, நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. 40 ஆண்டுகால எனது வாழ்க்கைக்குப் பிறகும் இன்றும் அதே அன்பைப் பெறுவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. குபேரா படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று பேசினார்.
எனினும் தொடர்ந்து அவர் தனது கதாபாத்திரம் குறித்து பேசியது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், “நான் தான் படத்தின் ஹீரோவாக உணர்ந்தேன். முழு கதையும் நான் ஏற்ற தீபக் கதாபாத்திரத்தை சுற்றியே சுழல்கிறது. படத்தில் ஸ்பேஸ் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அது எனக்கு பொருட்டல்ல. ஆனால் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான படம் இது தீபக்கின் படம். சேகர் என்னிடம் கதைச் சொல்லும்போதே அப்படித்தான் சொன்னார்” என கூறினார்.
ஏற்கெனவே திரைக்கதை சரியில்லை என ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில், படத்தின் ஹீரோ நான் தான் என நாகர்ஜூனா பேசியது தனுஷ் ரசிகர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“