பொங்கல் ரேசில் ‘கேப்டன் மில்லர்’!

Published On:

| By Kavi

Captain Miller will release for Pongal

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’.

ADVERTISEMENT

வரலாற்று படமாக உருவாகும் இந்தப் படத்தில்  பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

2024ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதாக கேப்டன் மில்லர் பொங்கல் போட்டியில் இணைந்திருக்கிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : DRDO-வில் பணி!

திருப்பதி:  வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் – நாளை வெளியீடு!

விதைத்தவர் பெரியார் : விளைந்தது சந்திராயன் வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share