தேசிய தலைவர் படவிழா: அடிக்கப் பாய்ந்த எஸ்.எஸ்.ஆர் கண்ணன்

Published On:

| By Kavi

தேசிய தலைவர்பட விழாவில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை மரியாதைக் குறைவாகப் பேசியதாகக் கூறி அவரது மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், பேச்சாளரை அடிக்க பாய்ந்த செயல் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை சினிமாவாக எடுப்பது இந்திய சினிமாவில் டிரெண்டாகி வருகிறது.

ADVERTISEMENT

அதுபோன்ற பயோபிக் கதைகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளில் விரும்பி பார்க்கப்படுகிறது அதனால் பயோபிக் படங்கள் தயாரிப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவரும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவருமான முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தேவரை போன்ற உருவ அமைப்பு உள்ள ஜெ.எம்.பஷீர் தேவராக நடிக்கிறார். 

ADVERTISEMENT

ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில்  ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி ஆகியோர் தயாரிக்கின்றனர் ஊமை விழிகள் ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார். 

தேவரின் தீவிர விசுவாசியான ஏ.ஆர்.பெருமாள் தேவர் எழுதிய ‘முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல் ஒன்று2021 அக்டோபர் 30 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 12) மாலை சென்னையில் உள்ள ஏவி.எம்.ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் மறைந்த  நடிகர் எஸ்.எஸ்..ராஜேந்திரனின் மகன் கண்ணன் கலந்துகொண்டு பேசும்போது,

“தனது அப்பாவான எஸ்.எஸ்.ஆர்.தான் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி காலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார்” என்று குறிப்பிட்டார்.

மேலும் தேவர் ஐயா தனக்கு சிகிச்சையளிக்க பெண் நர்ஸ்கள் வேண்டாம். ஆண் நர்ஸ்கள்தான் வேண்டும் என்று கேட்டதையும் எஸ்.எஸ்.ஆர்.தான் செய்து கொடுத்தார் என்றும் கண்ணன் தெரிவித்தார்.

இவருக்கு அடுத்து பேச வந்த பேச்சாளர் ஒருவர், இதை முற்றிலும் மறுத்து, “வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தேவரை சாதாரணமாக வந்து நலம் விசாரித்துவிட்டுப் போனார் எஸ்.எஸ்.ஆர்.” என்று தெரிவித்தார்.

இதைக் கேட்டு ஆவேசமான எஸ்.எஸ்.ஆர். கண்ணன் “எங்கப்பாவையே தப்பா பேசுறியா.. நீ யாருய்யா.. நீ கூட இருந்து பார்த்தியா..?” என்று ஆவேசப்பட்டு அவரை அடிப்பதற்காகப் பாய்ந்தார்.

ஆனால் மேடையில் இருந்த இயக்குநர் அரவிந்தராஜ் எஸ்.எஸ்.எஸ்.ஆர் கண்ணனை தடுத்து நிறுத்தினார்.

உடனே மேடையில் இருந்து கீழே இறங்கிய எஸ்.எஸ்.ஆர். கண்ணன் அந்தப் பேச்சாளரை கடுமையாகத் திட்டித் தீர்த்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

இராமானுஜம்

அக்டோபர் 28 முதல் பால் நிறுத்த போராட்டம்!

கோவா அணியில் ஜொலிக்கும் டெண்டுல்கர் மகன்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share