ADVERTISEMENT

ரஜினி -சுந்தர் சி குறித்து இழிவான பதிவு : குஷ்பு கொடுத்த பதிலடி!

Published On:

| By Kavi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகிய அறிவிப்பு, தமிழ் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த எதிர்பாராத திருப்பத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு சில நெட்டிசன்கள் ரஜினிகாந்தை இழிவாகப் பேசியும், நடிகை குஷ்பு சுந்தர் குறித்து அவதூறாகவும் பதிவிட்டு, வருகின்றனர்.

ADVERTISEMENT

குறிப்பாக, ஒரு நெட்டிசன் “ஐட்டம் பாடலுக்கு குஷ்பு கூட ஆடலாமா என கேட்டிருப்பாரோ” என்று பதிவிட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கேலிக்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் தனது பாணியில் மிகக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இல்ல உங்க வீட்டுல இருந்து யாரையாவது ஆட வைக்கலாமான்னு நினைச்சோம்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிலைப் பார்த்ததும் அந்த நெட்டிசன் , “எங்கள் வீட்டில் யாரும் ஐட்டம் டான்ஸ் ஆட மாட்டார்கள் மேடம்” என்று பதில் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

பொதுவெளியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பிரபலங்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் இணைய அச்சுறுத்தலுக்குக் குஷ்புவின் பதில் ஒரு தைரியமான பாடமாக அமைந்திருப்பதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

சுந்தர். சி ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த ஊகங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்ததாக யாருக்கு இந்தப் பட வாய்ப்புச் செல்லும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share