அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக இன்று (செப்டம்பர் 18) அறிவிக்கப்பட இருக்கிறார் என நேற்று இரவில் இருந்து திமுக உயர் மட்ட வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
நேற்று இரவு நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதன் முறையாக அறிவிக்கப்பட்ட ‘ஸ்டாலின் விருது’ பெற்ற தஞ்சை பழனிமாணிக்கம் பேசும்போது, “உதயநிதியை துணைமுதல்வராக அறிவிக்க இன்னும் ஏன் தாமதம்?’ என்று கேள்வி எழுப்பினார்.
திமுகவின் தலைமை நடத்துகிற முப்பெரும் விழாவில் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை வைத்துக் கொண்டு அவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் பழனிமாணிக்கம் பேசிய பேச்சு சாதாரணமானது அல்ல என்கிறார்கள் திமுக முக்கியஸ்தர்கள்.
நேற்று தனது நிறைவுரையில் இதுகுறித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஏதும் பதிலளிக்கவில்லை என்றாலும், இன்று (செப்டம்பர் 18) காலை 11.30 மணியளவில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படும் அறிவிப்பு வரக் கூடும் என்பதே திமுகவின் ஹைலெவல் எதிர்பார்ப்பு!
–வேந்தன்
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
பயில்வான் ரங்கநாதன், காந்தராஜ் மீது நடவடிக்கை கோரும் மாதர் சங்கம்!

Comments are closed.