இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒரு தமிழர் உட்பட 3 பேர், கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். Deportation from India to Sri Lanka – 3 Arrested
இலங்கையில் பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 3 பேர், அந்நாட்டைவிட்டு தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
இந்த 3 குற்றவாளிகளும் இந்தியாவில் இருப்பதை உறுதி செய்த இலங்கை அரசு மூவரையும் நாடு கடத்த கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில் இந்தியாவில் பதுங்கி இருந்த சிங்களரான மாதிவெலகே ஆசித சாகர குணதிலக்க, சுமித் ரோலன்ட் பெர்ணான்டோ மற்றும் தமிழரான செல்வராஜ் கபின் ஆகிய 3 பேரும் இலங்கைகு நாடு கடத்தப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இந்த மூவரும் கொழும்பு விமான நிலையத்திலேயே அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
