நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Jegadeesh

Demonstration against the Mayor of thirunelveli Corporation

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக இன்று (ஜூலை 14) பசும்பொன் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகராட்சியில் மேயராக சரவணன், துணை மேயராக கே.ஆர்.ராஜூவும் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரத்தில் அப்போதைய மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த அப்துல் வகாபிற்கும், மேயர் சரவணனுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்தது.

மாநகராட்சி விவகாரங்களில் அப்துல் வஹாப் தலையிடுவதாக மேயர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அப்துல் வகாப்பிடம் கலந்து ஆலோசிக்காமல் மேயர் தன்னிச்சையாக செயல்படுவதாக வஹாப் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை நெல்லை மாநகராட்சியின் மேயர் சரிவர செயல்படவில்லை கமிஷன் தொகை மற்றும் மாமன்ற உறுப்பினர்களோடு இணக்கம் இல்லை போன்ற தொடர் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாய் பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் இன்று (ஜூலை 14) பசும்பொன் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாநில தலைவர் இசக்கி ராஜா தலைமையில் நெல்லை மாநகராட்சியின் மேயர் ஊழல்வாதி என்றும் மக்கள் பணி செய்வதற்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் லஞ்சம் கேட்பதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நெல்லை மாநகராட்சியின் ஒரு கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு மேயருக்கு மட்டும் ரூபாய் 21 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ரூபாய் 3 கோடி லஞ்சம் கேட்பதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நெல்லை மாநகராட்சியின் மேயரை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் எனவும் மேயருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நெல்லை சரவணன்

மாலத்தீவில் ரஜினி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடர்: பிசிசிஐ அறிவிப்பு!

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை நடைப் பயண துவக்க விழா…  எடப்பாடி பங்கேற்பாரா? அமித் ஷாவின் வியூகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share