சாதி சான்றிதழ்: பூம்பூம் மாட்டுக்காரர்கள் கோரிக்கை!

By admin

|

Published on 20 Apr 2022, 12:00 AM

சாதி சான்றிதழ் வழங்க கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ளனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். அப்போது பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரண்டு வந்து ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ” 185 குடும்பத்தினர் கடந்த 28 ஆண்டுகளாக மொடக்குறிச்சி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் ஜெ.ஜெ. நகரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக எங்கள் குழந்தைகள் பள்ளி படிப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
தற்போது வரை எங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லை. இதற்கிடையில் தங்கள் உத்தரவின் பேரில் சுமார் 250 பேருக்கு ஆன்லைனில் சாதி சான்றிதழ் வழங்குவதாக ஈரோடு ஆர்டிஓ உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது வரை 250 பேரில் மூன்று பேருக்கு மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் காலதாமதமின்றி சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.

**-ராஜ்-**

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

admin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel