பயிர்க் காப்பீடு: டெல்டா விவசாயிகள் தயங்க காரணம் இதுதான்!

Published On:

| By Selvam

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடியின்போது பேரிடர்கள், மழை, வெள்ளம், வறட்சி போன்றவை ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ்  தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 15-ம் தேதிக்குள் நிகழாண்டு ரபி (சம்பா, தாளடி) பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செலுத்த கடைசி நாள் என காப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பயிர்க் காப்பீடு செய்தாலும் பெரும்பாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காத காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் காப்பீடு செய்ய விவசாயிகள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும், பயிர்க் காப்பீடு பிரீமியத்தை ஆண்டுதோறும் விவசாயிகள் செலுத்தி வந்தாலும், அதற்கான இழப்பீட்டுத் தொகை என்பது ஆண்டுதோறும் குறைந்து வருவதால் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் பிரீமியம் செலுத்த விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள டெல்டா விவசாயிகள், ”விவசாயிகளை பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த வைக்க ஆர்வம்காட்டும் வேளாண்மைத் துறையினர், பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடு பெற்றுத் தருவதில் ஆர்வம்காட்டுவதில்லை.

பயிர்க் காப்பீடு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் யாரை அணுகுவது என விவசாயிகள் தெரியாமல் உள்ளனர்.

எனவே, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பயிர்க் காப்பீடு நிறுவனத்தின் சார்பில் அலுவலகம் திறக்க வேண்டும்.

பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் நிலங்களை சோதனை அறுவடை செய்யும்போது, விவசாயிகளையும் அருகில் வைத்துக்கொண்டு அறுவடை செய்ய வேண்டும்.

அதேபோல, வருவாய் கிராம அளவில் பாதிப்பு ஏற்பட்டால் தான், இழப்பீடு என்பதை மாற்றி, தனி நபர் வயலில் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் வகையில் சேத மதிப்பு கணக்கீடு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

பயிர்க் காப்பீடு திட்டத்தால் தனியார் நிறுவனங்கள்தான் பயன் பெறுகின்றன. எனவே, தமிழக அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ராஜ்மா சாண்ட்விச்

இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவீங்க… அப்டேட் குமாரு

ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?

மஞ்சக்கொல்லை – பாமக – விசிக மோதல்: நடந்தது என்ன? கிரவுண்ட் ரிப்போர்ட்!

மகன் தாலி கட்டியதை பார்த்து, நெப்போலியன் கண்களில் திரண்ட கண்ணீர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share