சுவையான, சத்தான சோள தோசை செய்வது எப்படி?

By Santhosh Raj Saravanan

|

Published on 31 May 2026, 10:39 AM

Delicious and nutritious corn dosa recipe and its health benefits

உடல் எடை குறைப்புக்கு உதவும் சத்தான, சுவையான சோள தோசை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தினமும் நாம் இட்லி, தோசையையே காலை உணவாக சாப்பிட்டு வருகிறோம். ஆனால், அதில் மாவுச்சத்துதான் அதிகமாக உள்ளது.  தற்போதைய சூழலில் ஆரோக்கியமாக உடல்நலனை பராமரிக்க சமச்சீரான உணவு முறையை பின்பற்ற மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் ஆரோக்கியமான காலை உணவுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். இதற்காகவே உங்களுக்கு சோள தோசை (corn dosa) ரெசிபியை சொல்கிறோம்.

ADVERTISEMENT

சோள தோசை செய்வதற்குத் தேவையான பொருட்கள்

1 கப் சோள மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/4 கப் ரவை, தயிர், பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, (Ingredients for Corn Dosa) கொத்தமல்லி இலைகள், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை போதுமானவை. விரும்பினால், துருவிய கேரட் மற்றும் இஞ்சியையும் சேர்க்கலாம்.

ADVERTISEMENT

சோள தோசை செய்வது எப்படி?

முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு மற்றும் ரவையைப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். அதனுடன் தயிர், நறுக்கிய வெங்காயம், (How to make corn dosa) பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பிறகு தண்ணீர் சேர்த்து மெல்லிய மாவாகப் பிசைய வேண்டும்.  மாவை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

ADVERTISEMENT

இதற்குப் பிறகு தோசைக் கல்லைச் சூடாக்கி, அதில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை ஊற்றி வட்ட வடிவில் பரப்பவும். இருபுறமும் மொறுமொறுப்பாகும் வரை வேகவைக்கவும். இப்போது சுவையான சோள தோசை தயார். இதைத் தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் (Tomato Chutney) சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அள்ளும்.

சோள தோசை நன்மைகள்

சோளத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சோள தோசை (Benefits of corn dosa) மிகவும் நல்லது. இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இதை சாப்பிடலாம்.

சோளத்தில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ரத்தசோகையைத் தடுக்கவும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும் (weight loss food) முயற்சியில் இருப்பவர்களுக்கு இது ஒரு சரியான உணவாகும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel