சிபிஐ விசாரணைக்கு நாளை ஜனவரி 12-ந் தேதி ஆஜராகும் தவெக தலைவர் விஜய்-க்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் விசாரணைக்கு விஜய் ஆஜராகிறார்.
விஜய்க்கு மத்திய அரசு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குகிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு செல்லும் விஜய்க்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இ மெயில் மூலம் தவெக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்டுள்ள டெல்லி போலீஸ், டெல்லி விமான நிலையம் முதல் விஜய் செல்லும் இடங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் படை மற்றும் டெல்லி போலீசார் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
