ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி.காவல்!

Published On:

| By Kavi

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் காவல் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கடத்தியுள்ளார்.

அவருக்கு தொடர்புடையை திரை உலகத்தைச் சேர்ந்தவர்களிடமும், திமுகவினரிடமும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, இவ்வழக்கில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று என்.சி.பி.துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 9) மதியம் ஜாபர் சாதிக் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக்கை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் விசாரணைக்காக திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவருக்கு என்.சி.பி சம்மன் அனுப்பலாம் என்றும் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கும் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Spam கால் மற்றும் மெசேஜ் தொல்லையா?… இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க!

Premalu: தமிழில் வெளியாகும் ‘பிரேமலு’ ரிலீஸ் தேதி இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share