delhi cm arvind kejriwal likely arrest by ed
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் இன்று (ஜனவரி 4) கைது செய்யப்படலாம் என்று அம்மாநில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிருந்தது. நவம்பர் 2 ஆம் தேதி ஆஜராக கோரி அனுப்பப்பட்ட அந்த சம்மனுக்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால்,
‘இந்த சம்மன் தெளிவற்றதாக உள்ளது. சந்தேகப்பட்டு என்னை அழைக்கிறீர்களா சாட்சியாக என்னை அழைக்கிறீர்களா என்ற விவரம் அதில் இல்லை.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில் அழைக்கப்படுகிறேனா அல்லது டெல்லி முதல்வர் என்ற அடிப்படையில் அழைக்கப்படுகிறேனா என்ற தெளிவும் இல்லை.
இது அரசியல் ரீதியான சம்மன். நான் மத்திய பிரதேசம் தேர்தல் பிரச்சாரம் செல்லும் நிலையில் அதை தடுப்பதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்று அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினார்.
இதனை தொடர்ந்து டிசம்பர் 21, ஜனவரி 3 ஆகிய தேதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
தொடர்ச்சியாக மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாததால், அவர் கைது செய்யப்படலாம் என்று அம்மாநில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
News coming in that ED is going to raid @ArvindKejriwal’s residence tmrw morning. Arrest likely.
— Atishi (@AtishiAAP) January 3, 2024
இதுகுறித்து டெல்லி சட்டம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி மற்றும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் நேற்று (ஜனவரி 3) இரவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“நாளை காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்ய உள்ளதாக செய்திகள் வருகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியானது தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் புதிய படம்: போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
delhi cm arvind kejriwal likely arrest by ed