மகளிர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 109 ரன்களில் சுருட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 110 ரன்கள் என்ற எளிய இலக்குடன் விளையாடி வருகிறது.
மகளிர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் இன்று (மார்ச் 20) விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 3 வீராங்கனைகளான யஸ்டிகா பாட்டியா(1), ஹைலி மேத்யூஸ்(5), நாட் ஸ்கிவர் பிரண்ட் (0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 23 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் பூஜா வஸ்ட்ராகர் 26 ரன்களும், இசி வாங் 23 ரன்களும், அமன்ஜோத் கௌர் 19 ரன்களும் அடித்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீராங்கனையும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மேரிஸன் கேப், ஷிகா பாண்டே, ஜெஸ் ஜோனாசென் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இவ்வாறாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களில் சுருண்டது. 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடள்ஸ் அணி விளையாடி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்