ராகுல் இருக்கும்போது அக்சர் படேலை டெல்லி கேப்டனாக நியமித்தது ஏன்?

Published On:

| By christopher

delhi capitals nes captain axar patel

டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் இன்று (மார்ச் 14) நியமனம் செய்யப்பட்டுள்ளார். delhi capitals nes captain axar patel

மெகா ஏலத்தைத் தொடர்ந்து வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் 18வது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் பெருமளவில் வீரர்களின் மாற்றம் நடந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பஞ்சாப் அணிக்கு சென்றார். அதேவேளையில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

இதனைடுத்து டெல்லி அணியின் கேப்டன் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது. இந்த நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக, அந்த அணியில் கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வரும் அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியில் பல கேப்டன்கள் உள்ளனர்! delhi capitals nes captain axar patel

தனக்கு வழங்குப்பட்ட கேப்டன் பதவி குறித்து அக்சர் பட்டேல் கூறுகையில், “டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது முழு மரியாதையாக பார்க்கிறேன். மேலும் என் மீது நம்பிக்கை வைத்ததற்காக எங்கள் உரிமையாளர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கேபிடல்ஸில் இருந்த காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தற்போது தயாராகவும் நம்பிக்கையுடனும் உணர்கிறேன்.

எங்கள் பயிற்சியாளர்களும் நிர்வாகத்தினரும் மெகா ஏலத்தில் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர். இதனால் தற்போது மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணி டெல்லிக்கு கிடைத்துள்ளது. அணியில் ஏராளமான கேப்டன்கள் உள்ளனர். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் எங்கள் ரசிகர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவுடன் கேபிடல்ஸ் அணிக்கு மிகவும் வெற்றிகரமான சீசனாக இது அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

அக்சர் படேல் ஐபிஎல் புள்ளிவிவரங்கள்: delhi capitals nes captain axar patel

அக்சர் படேல் கடந்த 11 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

2014 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த டிசம்பரில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு டெல்லி அணி அதிகபட்சமாக ₹16.5 கோடிக்கு அக்சர் படேலை தக்கவைத்துக் கொண்டது. .

இதுவரை விளையாடிய 150 போட்டிகளில், படேல் 21.47 சராசரியாகவும், 130.88 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 1,653 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 66 ஆகும்.

சமீப காலங்களில், படேல் இந்தியாவுக்காக 5வது இடத்தில் பேட்டிங் செய்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து சிறந்த ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்துள்ளார்.

சுழற்பந்துவீச்சாளரான அவர், 7.28 என்ற எகானமி ரேட்டுடன் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கே.எல்.ராகுல் வாழ்த்து!

இதற்கிடையே அனுபவம் வாய்ந்த கே.எல்.ராகுல் அணியில் இருக்கும்போது, படேலை கேப்டனாக நியமித்தது தவறு என ஒரு தரப்பினரும், படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், ராகுல் இந்த தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், “வாழ்த்துக்கள் அக்சர். இந்தப் பயணம் உங்களுக்கு சிறப்பாக அமையும். எப்போதும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என கே.எல் ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share