ADVERTISEMENT

நீதிமன்றத்துக்கு வர தாமதம் : காணொளியில் ஆஜரான திருமாவளவன்

Published On:

| By Kavi

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 27) காணொளி மூலம் ஆஜரானார்.

2003 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் விசிக தலைவரும், தற்போதைய சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன் தலைமையில் மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த பேரணியின் போது கலவரம் ஏற்பட்டதால் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராகும்படி திருமாவளவனுக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் கடந்த ஜூலை 31ஆம் தேதி நீதிபதி விஜயகுமாரி திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

அப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று திருமாவளவன் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆகஸ்ட் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு பிடிவாரண்ட்டை திரும்ப பெற்றார்

ADVERTISEMENT

இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் நீதிமன்றத்துக்கு வருவதற்கு தாமதமானது.

இதனால் அவர் காணொளி காட்சி மூலம் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

இதைகேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ஆ ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதைத்தொடர்ந்து இன்று மாலை நீதிமன்றத்துக்கு வந்த திருமாவளவன் வழக்குத் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

திருமாவளவன் நீதிமன்றத்துக்கு வருகைத்தந்த போது ஏராளமான விசிக தொண்டர்கள் குவிந்ததால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

விஜய் கொடியில் யானை… தேர்தல் ஆணையத்தில் பிஎஸ்பி புகார்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share