Ekkadiki Pothavu Chinnavada: போட்டியிடும் தமிழ் ஹீரோஸ்

Published On:

| By Balaji

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ekkadiki Pothavu Chinnavada’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஆனந்த் இயக்கத்தில் நிகில் சித்தார்த், ஹெபா பட்டேல், நந்திதா, அவிகா கோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், ரொமான்ஸ் த்ரில்லர் களத்தில் உருவாக்கப்பட்டது. சேகர் சந்திரா இசையமைத்த இப்படத்துக்கு சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி வசூல் செய்திருக்கிறது. தற்போது இதை தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சிபிராஜ் ஆகியோர் இந்தப் படத்தை பார்த்திருக்கின்றனர். இவர்களில் யார் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இந்த படத்தை அதன் தெலுங்கு தயாரிப்பாளர் பி.வி.ராவுடன் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தமிழில் தயாரிக்கவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share