அவதூறு வீடியோ: கனல் கண்ணன் கைது!

Published On:

| By Jegadeesh

அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் கனல் கண்ணனை போலீசார் இன்று (ஜூலை 10) கைது செய்துள்ளனர்.

திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முண்ணனி மாநில கலை இலக்கிய பிரிவின் செயலாளருமான கனல் கண்ணன் கடந்த மாதம் 18 ஆம் தேதி தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதில், கிறிஸ்தவ மதபோதகர் உடையில் ஒருவர் இளம்பெண்ணுடன் நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல்கள் வைத்து எடிட்டும் செய்யப்பட்டு…”

வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்? மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்! மனம் திரும்புங்கள்” என்று கூறப்பட்டிருந்தது. இதனிடையே சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ADVERTISEMENT

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேட்டிசும் அனுப்பியிருந்தனர்.

ADVERTISEMENT

இச்சூழலில், இன்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசில் ஆஜரானார்.
விசாரணையின் முடிவில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மிஷ்கினுக்கு படம் இயக்குவதற்கு  இனி நேரமே கிடைக்காது: சிவகார்த்திகேயன்

“இந்த டிவி ஆபிஸுக்கு பதில் அந்த டிவி ஆபிஸை அடிச்சிட்டேன்”: கடலூர் களேபரம்!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share