காதலர் தினம்: ஒவ்வொரு ‘கலர்’ ட்ரெஸ்க்கும் அர்த்தம் இதுதான்!

Published On:

| By Minnambalam Login1

பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அதோடு இன்று நீங்கள் அணியும் ஆடைக்கும் ஒரு பொதுவான அர்த்தம் இருக்கிறது.

அந்தவகையில் ஒவ்வொரு கலர் ஆடைக்குமான அர்த்தம் என்னவென்பதை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிவப்பு 

இன்று நீங்கள் சிவப்பு ஆடை அணிந்தால், சிக்கி விட்டீர்கள் காதலில் என்று அர்த்தமாம். அல்லது சிக்னல் இன்று கிடைக்கும். ஒரு ஒத்த ரோசாவோ அல்லது மொத்த ரோசாவையோ தூக்கிட்டு போகலாம் ரைட்!

love for red

மஞ்சள்

காதலில் தோல்வி அடைந்தவர். பிரேக்-அப் பார்ட்டி. அதனால் கம்முனு கடந்து போக வேண்டாம், ஒரு பஸ்சை தவற விட்டால், அடுத்த பஸ் வர்றவரை வெயிட் பண்ணுவோம் இல்லையா? அதுபோல வெயிட் பண்ணுங்க சகோதரா..

yellow

ஆரஞ்சு 

‘ஆசை’ படத்துல வர்ற அஜித் மாதிரி, உங்கள் நண்பர் ஆரஞ்ச் கலர் டிரஸ் போட்டு போனார்னு வச்சிக்குங்க. பார்ட்டி ப்ரபோஸ் பண்ண போறாராம். கப்புனு அமுக்கி நைட் ஒரு பார்ட்டிக்கு ரெடி பண்ணிடுங்க.

நீலம்

நீல வண்ணம் அணிந்து போகிறவர் கொஞ்சம் ரொமாண்டிக் பார்ட்டி. இவரை யார் வேண்டுமென்றாலும் அணுகி காதலை தெரிவிக்கலாம். நான் ரெடி? நீங்க ரெடியா? என இந்த பார்ட்டி சுத்தும். எதுக்கும் கல்யாணம் ஆச்சான்னு? ஒரு வார்த்தை கேட்டு வைங்க.

பிங்க்

பிங்க டிரஸ் அணிபவர் இன்று கொஞ்சம் கெத்தாத்தான் திரிவாப்ல ஏன் தெரியுமா? அவர் ப்ரபோஸ் பண்ண பையனோ, பெண்ணோ சரி சரி காதலிச்சு தொலைக்கிறேன்னு ஏத்துக்கிட்ட மிதப்புல இருப்பாப்லயாம்.

கருப்பு

பாவம். இவரை யாராவது வம்பா சீண்டிடாதீங்க இவரது காதல் நிராகரிக்கப்பட்டதாம். அதனால இவரு மொரட்டு சிங்கிளா வாழப்போறேன்னு சோகமாக இருப்பாராம் பாவத்தை!

love for black

பச்சை

ஓகே பண்ணுவாங்களா? இல்லை வேண்டாம்னு ஒதுக்குவாங்களான்னு? தெரியாமல் ஒரு குழப்பமான நிலையிலே சுத்தற ஆளுங்க நடிகர் முரளி மாதிரி காதலுக்காக ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என கானம் பாடும் பார்ட்டிங்க.

வெள்ளை

டூயட் பாடலில் வரும் தேவதைகள் அணியும் வெள்ளை ஆடையில் வந்தால், ஏற்கனவே காதலில் விழுந்தவர்னு அர்த்தமாம். அதை விட முக்கியம் அவருக்கு வீட்டில் பேசி முடிச்சுட்டாங்களாம். நீங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்.

பர்ப்பிள் & கிரே 
இப்போ காதலிக்க எல்லாம் நேரம் இல்லை. காதலிக்கவும் விருப்பமில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணா மனசு மாறலாம். அதையும் உறுதியாக சொல்ல முடியாது. முயற்சி பண்ணுங்க முடிஞ்சா பார்க்கலாம்.

பிரவுன்

உருகி உருகிக் காதலித்தவர் விட்டுச் சென்றால் மனசு உடைந்து போகும் அல்லவா? பிரவுன் ஆடை அணிபவர்கள் அப்படியொரு தீரா சோகத்தில் இருப்பவர்களே அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்… சரியாகி விடுவார்கள்!

-ரசிக பிரியா, கவின் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐபிஎல் 2024 தொடர் எங்கு நடைபெறும்?… சேர்மன் கொடுத்த அப்டேட்!

தடியடி.. கண்ணீர் புகை குண்டுகள்.. பரபரக்கும் களம் : விவசாயிகள் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share