5 தொகுதிகள்.. ஸ்டாலின் வேண்டுகோள்-சிபிஎம் நாளை முடிவு!

Published On:

| By Mathi

CPM DMK Alliance

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை கூடி முடிவெடுக்க உள்ளது.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தி வருகிறது. சென்னையில் நேற்று 13 மணி நேரம் நடைபெற்ற சிபிஎம் மாநில செயற்குழுக் கூட்டத்திலும் 6 தொகுதிகளுக்கு குறைவான எண்ணிக்கையை ஏற்க கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது, 5 தொகுதிகளை சிபிஎம் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ”முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின், தொகுதிப் பங்கீடு பற்றி நேரிடையாக எங்களிடம் பேசி உள்ளார். இது தொடர்பாக சிபிஎம் மாநில செயற்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு நாளை மார்ச் 23-ந் தேதி காலை கூடுகிறது. அக்கூட்டத்தில், திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்பதா? அதனை நிராகரித்து ஏற்கனவே திட்டமிட்டபடி சில தொகுதிகளில் தனித்து போட்டி; பல தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என முடிவு எடுப்பதா? என்பது தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share