கூட்டணி குறித்து முடிவு? ஜனவரி 5-ல் தேமுதிக மா.செ.க்கள் கூட்டம்

Published On:

| By Mathi

DMDK Alliance

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜனவரி 5-ந் தேதி நடைபெறும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. அதிமுக- பாஜக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது தேமுதிக.

ADVERTISEMENT

இனிவரும் நாட்களில், கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 5-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share