மாதம் பிறந்தாலே செலவுகளும் பிறந்துவிடும். அதிலும் இந்த டிசம்பர் மாதம் நம் ஊருக்குக் கொஞ்சம் ரிஸ்க்கான மாதம். ஒரு பக்கம் கனமழை பயம், மறுபக்கம் அடுத்த மாதம் வரப்போகும் பொங்கல் செலவுகள். இந்தச் சூழலில், புத்திசாலித்தனமாக ஒரு விதியை (Rule) பின்பற்றினால், இந்த மாதம் உங்கள் வீட்டு பட்ஜெட்டில் குறைந்தது ₹2000 வரை மிச்சப்படுத்தலாம். அதுதான் டிசம்பர் 1 விதி (December 1st Rule).
சம்பளம் வந்தவுடன் நீங்கள் வாங்க வேண்டிய அந்த 3 பொருட்கள் என்ன? ஏன் இப்போதே வாங்க வேண்டும்?
- அரிசி மற்றும் துவரம் பருப்பு (25kg மூட்டை)
இப்போது கார்த்திகை, மார்கழி மாதம் என்பதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை இருக்கும். கனமழை பெய்தால் லாரி போக்குவரத்து பாதித்து, அரிசி மற்றும் பருப்பு விலை சட்டென்று எகிறிவிடும் (“மழைக்கால விலை ஏற்றம்”).
நீங்கள் வழக்கமாக மாதம் 10 கிலோ வாங்குபவர் என்றால், இந்த முறை 25 கிலோ பையாக (Bag) வாங்கிப் போடுங்கள். சில்லறை விலையை விட, மொத்த விலையில் வாங்கும் போது கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை குறையும். மேலும், ஜனவரி பொங்கல் சீசனில் விலை ஏறுவதற்கு முன் வாங்கி வைப்பது “ஸ்மார்ட் மூவ்”. - சமையல் எண்ணெய் (5 லிட்டர் கேன்)
உலக அளவில் பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலை உயர்ந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜனவரி மாதத்தில் எஃப்.எம்.சி.ஜி (FMCG) நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது..
பாக்கெட் பாக்கெட்டாக வாங்குவதை விட, 5 லிட்டர் கேனாக இப்போதே வாங்கி விடுங்கள். இப்போதே நீங்க தேவையான அளவுக்கு (இரண்டு மூன்று மாதத்திற்கு சேர்த்து கணக்கிட்டு) வாங்கி கொண்டால் பொங்கல் நேரத்தில் விலை ஏறினாலும் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் ஒரு கேனுக்கு ₹150 வரை மிச்சமாகும். - சோப்பு, பேஸ்ட் & டிடர்ஜென்ட் (Year End Offer)
• தமிழ்நாட்டு நிலவரம்:
டிசம்பர் மாதம் பல நிறுவனங்கள் தங்கள் பழைய ஸ்டாக்கை காலி செய்ய (Year End Sale) சலுகைகளை அள்ளி வீசுவார்கள். நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டுகளில் “Buy 1 Get 1” அல்லது காம்போ ஆஃபர்கள் கொட்டிக் கிடக்கும்.
அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான சோப்பு, துணி பவுடரை இப்போதே மொத்தமாக வாங்கி விடுங்கள். ஜனவரியில் பல கம்பெனிகள் விலையை சத்தமில்லாமல் உயர்த்துவார்கள். அதற்கு முன் நீங்கள் ஸ்டாக் செய்து கொள்வது புத்திசாலித்தனம்.
டிப்ஸ்: “மழை வருது… புயல் வருது” என்று செய்திகள் வரும்போது அவசர அவசரமாகக் கடைக்கு ஓடினால் அதிக விலை கொடுக்க வேண்டி வரும். இன்றே அல்லது நாளையே பிளான் செய்து மொத்தமாக வாங்கிப் போடுங்கள். பர்ஸுக்கும் சேவிங்ஸ், மனதுக்கும் நிம்மதி!
