கடையநல்லூர் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தில் இன்று(நவம்பர் 24) காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
