ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சென்றிருந்த ராகுல் காந்தி இடஒதுக்கீடு குறித்து பேசியது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ’ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன்’ என பகிரங்கமாக அறிவித்தார்.
சஞ்சயின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுல்காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் நேரும் என்று பாஜக தலைவர் தர்விந்தர் சிங் மார்வா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கருத்துகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் கண்டனம்!
இந்த நிலையில் ராகுல்காந்திக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக தலைவர் ஒருவரின் மிரட்டல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்திரா காந்திக்கு நேர்ந்ததுதான் ராகுலுக்கும் நடக்கும் என்றும், நாக்கை அறுத்தால் பணம் வழங்கப்படும் என்றும் பாஜகவினர் மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
எனது சகோதரர் ராகுல் காந்திக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவும் பலரை நிலைகுலைய வைத்துள்ளது. அதுதான் இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? : எடப்பாடி பதில்!
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காலை 11 மணி வாக்கு நிலவரம் என்ன?
இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை கிராம் உப்பு சாப்பிடலாம் தெரியுமா?
