கள்ளச்சாராய மரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், நிதியுதவி வழங்கிய உதயநிதி

Published On:

| By indhu

Death by counterfeiting: Consolation for victims Udayanidhi funded

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  உதயநிதியுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Death by counterfeiting: Consolation for victims Udayanidhi funded

பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட நிவாரணமான ரூ.10 லட்சத்தை 27 குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

ADVERTISEMENT

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனையடைந்தார். இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

Death by counterfeiting: Consolation for victims Udayanidhi funded

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் சென்று சேர வேண்டும் என்று கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இங்கு அனுப்பி வைத்தார்.

அவரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து மருத்துவர்களிடம் விவரம் கேட்டு அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்கள் 27 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி.

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.” எனப் பேசினார்.

பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் பெற்றோர்களை இழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் அரசின் மூலம் செய்து தரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளக்குறிச்சி மரணம்: அமித்ஷாவிடம் ரிப்போர்ட்… அண்ணாமலை தகவல்!

கள்ளச்சாராய மரணம்… ஒருத்தரையும் விடக்கூடாது… கொந்தளித்த விஷால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share