ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வை எழுதும் தேர்வர்கள் ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 8 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

ADVERTISEMENT

கடைசி நாளான இன்று ஏராளமானோர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இணையதளம் முடங்கியது.

இதனால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் திணறினர். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரினர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள், அதாவது வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் ஆசிரியராக தொடர விரும்புவோர் கட்டாயம் டெட் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share