இன்னும் ரூ.2000 நோட்டுகளை மாற்றவில்லையா? ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

Deadline for exchange of Rs 2000 notes

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியுள்ளது.

புழக்கத்திலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி மே 19 அன்று அறிவித்தது. செப்டம்பர் 30, 2023க்குள் பொதுமக்கள் தங்கள் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

ADVERTISEMENT

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மே19 அன்று மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புடைய 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. செப்டம்பர்29 ஆம் தேதி நிலவரப்படி வங்கிகள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. இன்னும் ரூ. 0.14 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

96 சதவிகித ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக ஆர்.பி.ஐ தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதுவரை வங்கிகளில் கொடுத்து மாற்றாதவர்கள் அக்டோபர் 07, 2023க்குள் மாற்றிக்கொள்ளுமாறு கூறியுள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் 8ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை இருப்பு வைக்கவோ, அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

பிரியா

கலக்கலான வண்ணங்களில் டெக்னோவின் மெகாபுக் டி1 லேப்டாப்!

இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா : என்ன காரணம் ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share