வசூலிலும் கல்லா கட்டும் டிடி ரிட்டர்ன்ஸ்: முதல் வார ரிப்போர்ட்!

Published On:

| By christopher

dd returns box office collection report
ஆர்.கே.எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில் ஜூலை 28ஆம் தேதி அறிமுக இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் டிடிரிட்டர்ன்ஸ்.
இந்தப் படத்தில் சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் சங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், தீனா, பிபின், தங்கத்துரை, தீபா, சைதை சேது, மானஸி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தின்  வெற்றி அடுத்த பாகத்திற்கும் ஒரு முன்னுரை கொடுத்திருந்தது. ஆனால் 2-ம் பாகம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இப்போது அதன் தொடர்ச்சியாக ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற தலைப்பில் வேறொரு பேய்க் கதையைக் கொண்டு வந்திருக்கிறார் சந்தானம்.
திகில் கலந்த நகைச்சுவையுடன் கூடிய இந்த படம், முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் கடந்த வாரம் வெளியான டைனோசர்ஸ், லவ், டெரர், அறமுடைத்த கொம்பு,  எல்.ஜி.எம் ஆகிய நேரடி தமிழ் படங்களைத் தாண்டி தியேட்டர் வசூலிலும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது டிடி ரிட்டர்ன்ஸ்.
முதல்நாளில் சுமார் 2.10 கோடி ரூபாயை வசூல் செய்த டிடிரிட்டர்ன்ஸ், கடந்த மூன்று நாட்களில் சுமார் 7 கோடி ரூபாயை மொத்தமாக வசூல் செய்து உள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share