RCB vs DC : பெங்களூரு அணியை தோற்கடித்து, நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையுடன் டெல்லி அணி வெற்றிநடை போடுகிறது. dc register straigt 4th win ipl 2025
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 10) இரவு நடைபெற்ற ஐபிஎல் 24-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது ஆர்.சி.பி.
இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பில்சால்ட் மற்றும் டிம் டேவிட் தலா 37 ரன்கள் அடித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக பா டூ பிளெசிஸ் (2), ஜேக் ப்ரேசர் (7), அபிஷேக் போரல் (7) மற்று கேப்டன் அக்சர் படேல் (15) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்குச் சென்றது. எனினும் 5வது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல். ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் தங்கள் அணியை வெற்றி பெற வைத்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 53 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் நடப்புத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத அணி என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது.