டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. dc huge win against rr in super over
டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 16) இரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர் 49 ரன்களும், ராகுல் 38 ரன்களும், அக்சர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 34 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் நல்ல தொடக்கம் தந்தனர். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் குவித்த நிலையில், சாம்சன் (31) கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டர்யர்ட் ஹட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் வந்த ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் (51) – நிதிஷ் (51) ஜோடி அதிரடியாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ஹெட்மேயர் மற்றும் ஜூரல் 8 ரன்களே அடித்தனர். இதனால் போட்டி டிரா ஆகி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவரை சந்தித்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் அடித்தது. மிட்செல் ஸ்டாக்அந்த அணிக்காக களமிறங்கிய ஹெட்மேயர் (5) மற்றும் பராக் (4) ரன்கள் அடித்தனர்.
தொடர்ந்து டெல்லி அணிக்காக களமிறங்கிய ராகுல் (7) மற்றும் ஸ்டப்ஸ் (6) இருவரும் ஆட்டமிழக்காமல் நடப்பு தொடரில் நடந்த முதல் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றனர்.
பரபரப்பான இறுதி ஓவர் மற்றும் சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது வென்றார்.
