கொரோனா காலகட்டத்தில் பிரபல தெலுங்கு படமான புஷ்பா படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வைரலானார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். david warner will debuted in telugu
ஹைதராபாத் அணிக்காக அப்போது விளையாடி வந்த அவரின் ஏஐ வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், தெலுங்கு ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் புஷ்பா 2 படத்தில் நடிக்க போவதாகவும், அதன்மூலம் இந்திய திரையுலகில் அவர் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் புஷ்பா 2 படம் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் அதில் அவர் நடிக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நிதின் நடித்துள்ள ‘ராபின்ஹுட்’ பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஒரு போஸ்டரை இன்று வெளியிட்டது. அதில், டேவிட் வார்னரை இந்திய சினிமாவுக்கு வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் வார்னர் வெளியிட்ட பதிவில், “இந்திய சினிமாவே, இதோ நான் வருகிறேன். ராபின்ஹுட் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் படப்பிடிப்பை முழுமையாக என்ஜாய் பண்ணிணேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கி குடுமலா இயக்கியுள்ள இந்த படத்தில் நிதினுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். அதில் என்ன கதாப்பாத்திரத்தில் வார்னர் நடித்திருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.